Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Chennai

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வரும் 6ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் செப். 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. டிஜிட்டல் உலகத்தில், அசல் உரிமத்தை கையில் வைத்திருக்காமல், 'டிஜி லாக்கர்' முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன. இதையெல்லாம் ஏற்க மறுத்த தமிழக அரசு, தனது உத்தரவில் உறுதியாக இருந்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விச
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர