Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Cauvery water

தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா
காவிரி நீர் பங்கீடு:  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை;  15 டிஎம்சி வெட்டு

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப