Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Byelection

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!;  டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!; டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றோம். எல்லாமே டிடிவி தினகரனின் திட்டம்தான் என்று அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பல்வேறு கோணங்களில் புதிய கவன ஈர்ப்பை பெற்று இருந்தது. அதில் முக்கியமானது, சுயேட்சையாக பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றதுதான். கடந்த 13 ஆண்டுகளில் ஓர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்பதும் இந்த இடைத்தேர்தலில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் ஓட்டுக்கு ரூ.6000 விநியோகிக்கப்பட்டதாக
டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலை
ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று மண்ணைக் கவ்விய பாஜகவை, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 24, 2017) எண்ணப்பட்டன. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழக தேர்தல் களம் எப்போதுமே திமுக, அதிமுக என இருதுருவ அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்