Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: by cop manivannan from madurai

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

இலக்கியம், புத்தகம்
காக்கி உடைக்குள் இப்படியும் ஒரு கவிஞனா? என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார், மதுரையைச் சேர்ந்த முனைவர் ஆ.மணிவண்ணன். 'வான் தொட்டில்' கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றுகிறார். நூல் வெளியீடு, வானதி பதிப்பகம். காவல்துறை அதிகாரி என்பதால் துறை சார்ந்த முன்னாள், இந்நாள் உயரதிகாரிகளிடம் வாழ்த்துரை பெற்றிருக்கிறார். டிஜிபி கி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து மடலில், 'பகலில் காவலராகவும் இரவில் கவிஞராகவும் பரிணமித்திருக்கிறார்' என சுட்டியுள்ளார். 'வான் தொட்டில்' நூல், அறம், சட்டத்தை மதித்தல், குடும்பம், கடமை, ஆன்மீகம் ஆகியவற்றைப் பேசுகிறது. செலவில்லாமல் கிடைப்பதும், மதிக்கப்படாமலே போவதும் எதுவென்றால் இரண்டுக்கும் ஒன்றேதான் பதிலாக அமையும். அது, அறிவுரைகள். பொருள் சார்ந்து இயங்கும் இன்றைய உலகில் அறிவுரைகள் சொல்பவர்கள்கூட அருகிவிட்டனர். தான் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக இளைஞர்