Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: book

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர்
பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

இலக்கியம், புத்தகம்
காக்கி உடைக்குள் இப்படியும் ஒரு கவிஞனா? என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார், மதுரையைச் சேர்ந்த முனைவர் ஆ.மணிவண்ணன். 'வான் தொட்டில்' கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றுகிறார். நூல் வெளியீடு, வானதி பதிப்பகம். காவல்துறை அதிகாரி என்பதால் துறை சார்ந்த முன்னாள், இந்நாள் உயரதிகாரிகளிடம் வாழ்த்துரை பெற்றிருக்கிறார். டிஜிபி கி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து மடலில், 'பகலில் காவலராகவும் இரவில் கவிஞராகவும் பரிணமித்திருக்கிறார்' என சுட்டியுள்ளார். 'வான் தொட்டில்' நூல், அறம், சட்டத்தை மதித்தல், குடும்பம், கடமை, ஆன்மீகம் ஆகியவற்றைப் பேசுகிறது. செலவில்லாமல் கிடைப்பதும், மதிக்கப்படாமலே போவதும் எதுவென்றால் இரண்டுக்கும் ஒன்றேதான் பதிலாக அமையும். அது, அறிவுரைகள். பொருள் சார்ந்து இயங்கும் இன்றைய உலகில் அறிவுரைகள் சொல்பவர்கள்கூட அருகிவிட்டனர். தான் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக இளைஞர்
பூவனம்:  மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்)  -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

இலக்கியம், புத்தகம்
பட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், 'மறைக்கப்பட்ட பறையர் வரலாறு' என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம். ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார். இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு