Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: bomb blast

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)