Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: black flag protest

தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.   இதற்காக தனியார் பட்டா நிலங்கள், விளை நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இரு போகம் விளையக்கூடிய நிலம், 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் வற்றாத கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா தோப்புகள் என மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களும் இந்த சாலைக்கு இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இதனால் சேலம் மாவட்டம் முழுவதும்