Thursday, August 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Bigg boss

முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

சினிமா, முக்கிய செய்திகள்
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைஸா வில்சன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு தமிழத்திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வேலை இல்லா பட்டதாரி-2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.   தற்போது எப்ஐஆர், தி சேஸ், ஹேஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரைஸா வில்சன், அடிப்படையில் ஒரு மாடல் அழகியும் ஆவார். அதனால் எப்போதும் தன்னை பொதுவெளியில் வசீகரமாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு வருவார். அண்மையில், ஃபேஷியல் செய்து கொள்வதற்காக சென்னையில் உள்ள பிரபலமான அழகுநிலையத்திற்குச் சென்றிருந்தார். பேஷியல் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அவருடைய முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் முக
2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெள்ளித்திரைக்கு வெளியே அரசியல் தொடர்பாக ரஜினி எப்போது பேசினாலும், அவர் மீது ரசிகர்கள் சாராத மக்களுக்கு ஒருவித அய்யப்பாடு இதுவரை இருந்து வந்திருக்கிறது. 'எல்லாம் அடுத்த பட புரமோஷனுக்கான வேலைப்பா. படம் ரிலீசாகும்போது இப்படி பேசினாத்தானே கல்லா கட்ட முடியும்...' என்ற விமர்சனங்கள் எழுவது உண்டு. அந்த விமர்சனங்களை நாம் முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது; அதேநேரம் ரஜினியின் சந்தை நிலவரம் அந்தளவுக்கு சரிந்து விட்டதாகவும் கூற முடியாது. இன்றைக்கும் தமிழில் ரஜினியை வைத்து மட்டுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்று நம்பும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உண்டு. உதாரணம், முன்பு 'எந்திரன்'. இப்போது, '2.0'   ரஜினி ஒரு படத்துக்கு ரூ.55 கோடி ஊதியம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் நிலவரம் அப்படிப்பட்டதன்று. ரஜினியின் ஊதியத்தில் பாதிதான் கமலின் ஊதியம் என்கிறார்கள் விவரம
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப
கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார். தற்போது அரசியல் கட்சிக்கான பெயர், கொள்கை முடிவுகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட நேர்ந்தால், திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரும், இயக்குநர் சங்கரும் முடிவு செய்துள்ளனர். தற்போது ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சங்கர், அடுத்து அஜித்குமார் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவின. கமல்ஹாசனுடன் இணைவதாக இரு
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ
நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கல்விக்கொள்கை வகுக்கும் உரிமை மாநில அரசுகளின் வசம் கொண்டு வந்தால், நீட் தேர்வு பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துவிடும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற சமகால பிரச்னைகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது அரசியல் விமர்சன கருத்து சொல்லும் தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியின்போது, 'நான் இனி அரசியல்வாதிகளை வெளியில் இருந்து விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,' என்றுகூறி, அரசியல் களத்தில் இறங்கி விட்டதை வெளிப்படையாகவே சொன்னார். அந்த மேடையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். திங்கள்¢ முதல் வெள்ளிக்கிழமை வரை களைகட்டாத பிக்பாஸ் ந