Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Bharatiyar University

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு
‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு  நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜை, நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில், அவரை ஜீப்பில் அழைத்துச்சென்று போலீசார் ஊர் சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி (67). இப்பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப்பணியில் சேர்ந்துள்ளார். சில விதிகளை மீறி, சுரேஷை உதவிப்பேராசிரியராக நியமிக்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி கேட்டுள்ளார். அதை தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ், கொஞ்சம் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். அந்த நம்பிக்கையின்பேரில் அவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால
பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பொறி வைத்துப்பிடித்து, கைது செய்தனர். கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், கணபதி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் உறுப்புக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு சுரேஷ் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அந்த பணியில் சேர வேண்டுமானால், தனக்கு ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி பேரம் பேசியுள்ளார