Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: bharat mala pariyojana

நீதிமன்றம் தடை: ‘எட்டு வழிச்சாலை’ விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

நீதிமன்றம் தடை: ‘எட்டு வழிச்சாலை’ விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் நேற்று விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே சாலை மார்க்கமாக மூன்று வழித்தடங்கள் உள்ள நிலையில், புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் பெயரில், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் திட்டப்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களின் ஊடாக 277.3 கி.மீ. தொலைவுக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம் ஏற்காடு, திருவண்ணாமலையில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்பட மொத்தம் 2343 ஹெக்டேர் நி