Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: bathroom

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி
தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது. குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது. பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பத