Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: assistant professor vaidhyanathan

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்காமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்த பெரியார் பல்கலை பதிவாளரை மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலையில் பொருளியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழக மானியக்குழு, பகுதி நேரமாக பி.ஹெச்டி., முனைவர் பட்டத்தை எந்த வகையிலான விடுப்பும் எடுக்காமல் நிறைவு செய்யும்பட்சத்தில், அதற்குரிய காலத்தையும் கற்பித்தல் அனுபவமாகக் கணக்கிட்டு, பதவி உயர்வின்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு பதவி உயர்வின்போது மேற்சொன்ன விதியை ஏற்காமல், அவருக்கு பதவி உயர்வும் வழங்கவும் பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது.   இதையடுத்து வைத்தியந
பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி