Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Assembly election

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது.
சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 246 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர்.   கடந்த ஏப். 6ம் தேதி நடந்த தேர்தலில் 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாம் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக்கும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், வழக்கம்போல கனல் கக்குகிறது. இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றில், இந்த தேர்தலானது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மக்களும் கூட, தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வழக்கத்தை விடவும் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   நாளை (ஏப். 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள இந்த கடைசி நிமிடத்தில், திருவாளர் பொதுஜனங்களின் சிந்தனைக்காக சில சங்கதிகளை பேச விழைகிறேன். சற்றே நீளமான பதிவுதான். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் பொறுமை காத்து செவிசாய்க்க வேண்டுகிறேன்.   களத்தில் எத்தனை முனை போட்டி நிலவினாலும், நீங்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். எவற்றையெல்லாம் முன்வைத்து இங்கே ஒரு கூட்டணியை புற
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம
திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக 'லால் சலாம்' முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து 'பாரத் மாதா கி ஜே'வும், 'வந்தே மாதரம்' முழக்கமும் எதிரொலிக்கின்றன. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது. குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார்