Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Arvind Kejriwal

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார். தற்போது அரசியல் கட்சிக்கான பெயர், கொள்கை முடிவுகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட நேர்ந்தால், திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரும், இயக்குநர் சங்கரும் முடிவு செய்துள்ளனர். தற்போது ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சங்கர், அடுத்து அஜித்குமார் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவின. கமல்ஹாசனுடன் இணைவதாக இரு
பாஜகவுக்கு ரஜினி சொம்பு தூக்கினாரா?:  கமல் ரசிகர்கள் கிண்டல்

பாஜகவுக்கு ரஜினி சொம்பு தூக்கினாரா?: கமல் ரசிகர்கள் கிண்டல்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மையே சேவை' திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி - கமல் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நல்லகண்ணு, மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்ற மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்படவில்லை. சீமான், திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் மாற்று அரசியலை முன்னெடுக்கின்றனர். ஆனாலும், அவர்களை முதல்வர் நாற்காலிக்கான அந்தஸ்தில் வைத்துப் பார்க்க மக்கள் ஏனோ தயங்குகின்றனர். இத்தகைய இடைவெளியில்தான் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இரு முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் களம் காணும் ஆசை உச்சம் தொட்டு
”ஊழலுக்கு எதிரான அனைவரும் என் உறவினர்களே” – கமல்ஹாசன்

”ஊழலுக்கு எதிரான அனைவரும் என் உறவினர்களே” – கமல்ஹாசன்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழலுக்கு எதிரான யாருமே எனக்கு உறவாகி விடுகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் இன்று (செப்.21) நேரில் சந்தித்து பேசினார். கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த பேச்சு உச்சத்தில் உள்ள நிலையில், அவரை டெல்லி முதல்வர் திடீரென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ''டெல்லி முதல்வர் என்னை நேரில் சந்திக்க வந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எங்களின் சந்திப்பு எது தொடர்பாக இருக்கும் என்பதை நீங்கள் (ஊடகங்கள்) யூகித்து இருக்கக்கூடும். ஊழலுக்கு எதிரான யாருமே எனக்கு உறவாகி விடுகிறார்கள். அந்த வகையில் இந்த உறவு தொடரும்,'' என்றார். பின்னர் அவர் இதே கருத்தை, ஆங்கில ஊடகங்களுக்கு மொழிபெயர
‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்து விட்டாரா இல்லையா? என்று இன்னும் காட்சி ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்ப அவரும், 'இன்னும் சமையல் வேலை முடியவில்லை' என்பார்; அல்லது, 'ஓட்டுப் போடும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்' என்பார். இப்படி பூடகமாக பேசுவதும், 'ட்வீட்' போடுவதிலும் கமல் பி.ஹெச்டி., முடித்தவர்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கமலின் அரசியல் என்ட்ரி உறுதியானது பற்றி தெளிவாக புரிந்திருக்கும். அவர் நடிகர் சக்தியிடம் பேசுகையில், ''இனிமேல் நான் அரசியல்வாதிகளை நக்கல் செய்ய முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,'' என்பார். இப்படி குறியீடுகள் வாயிலாக பேசுவது கமலுக்கே உரித்தானது. அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, அரசியல் நுழைவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகி