Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Arnob Goswami

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது. நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார். அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம்
வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் 'மீடியா' என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை 'கோச்சர்' என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம்.