Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Appeal dismissal of the Government of Tamil Nadu

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா?  மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்