Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: apologize

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத காஞ்சி காமகோடி பீட இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் சிலை முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காஞ்சி மடம் அளித்துள்ள பதிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 23, 2018) நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார். விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, 'நீராருங் கடலுடுத்த...' எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. வழக்
அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இ