Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Anna

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத
ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப