Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: advocate ba.pa.mohan

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

குற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ப.பா.மோகன் பராக்… பிறழ் சாட்சிகள் ‘கிலி!’ சுவாதியிடம் மீண்டும் விசாரிக்க முடிவு!!#Gokulraj #day15

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ப.பா.மோகன் பராக்… பிறழ் சாட்சிகள் ‘கிலி!’ சுவாதியிடம் மீண்டும் விசாரிக்க முடிவு!!#Gokulraj #day15

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அந்தர் பல்டி அடித்த சுவாதி, அவருடைய தாயார் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் சிலரிடம் மறு விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பு முடிவு செய்திருப்பது, யுவராஜ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   பொறியியல் பட்டதாரி: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்தபோது, தன்னுடன் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருக்கமாக பழகி வந்தார்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்...   கல்லூரி படிப்பு முடிந்த பிறகும்கூட சில வேளைகளில் அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். அப்படி கோகுல்ராஜ், 23.6.2015ம் தேதி சுவாதியைச் சந்திக்க
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (5.1.2019) உத்தரவிட்டுள்ளது.   ஆணவப்படுகொலை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று காலை வீட்டில் இருந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனது நெருக்கமான தோழியான சுவாதியைக் காணச் சென்றிருந்தார். ஆனால் மறுநாள் மாலையில் (24.6.2015ம் தேதி) நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்