Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: 1500 families

புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்!

புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   தமிழகத்தில் புதுவாழ்வுத்திட்டம் நிறுத்தப்பட்டதால், அத்திட்டத்தில் பணியாற்றி வந்த 1500 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நலிவுற்ற பிரிவினரை தெரிவு செய்து, அவர்களின் வறுமையை போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் புதுவாழ்வுத் திட்டம்.   கடந்த 15.11.2005ம் தேதி, இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக உலக வங்கி ரூ.1665 கோடி கடனுதவி வழங்கி இருந்தது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.   மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் புது வாழ்வுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராமங்களில் இரண்டு விதமான அமைப்புகள