Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: 100 years

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந