Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஸ்மார்ட் சிட்டி

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.   சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே
சபாஷ்  மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சபாஷ் மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நகரம் 1866ல் உருவாக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1.6.1994ல் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. சீர்மிகு நகரமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.   ஒரு காலத்தில், சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரம், அதன்பிறகு மைசூர் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்த பிறகு, இந்த நகரம் கிழக்கிந்திய கம்பெனி வசம் கொண்டு வரப்பட்டது. அதனால், சேலம் மாநகரில் முக்கிய தெருக்கள், அங்காடிகள், வணிக பகுதிகள் பலவும் இயல்பாகவே ஆங்கிலேயர்களின் பெயர்களை வரித்துக்கொண்டன.   உதாரணத்திற்குச் சில...   ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் (HARRY AUGUSTUS BRETTS) என்ற ஆங்கிலேயர், 1853 முதல் 1862 வரை சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்தார். அவருடைய நினைவாக சேல
சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.  சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.   இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்கள
சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.   கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிக