Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஸ்டீபன் ஹாக்கிங்

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு
ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar

ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar

ஈரோடு, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக் கட்டுரை -   உலகம் கொண்டாடிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், இன்று (மார்ச் 14, 2018) தனது 76வது வயதில் மரணம் அடைந்தார். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளில் பெரியார் சிந்தனைகளுடன், ஸ்டீபன் ஹாக்கிங் பல இடங்களில் ஒத்துப்போகிறார்.   ரகசியங்கள் இல்லை:   ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி இந்த சமூகத்திற்கு தன்னையே உதாரண மனிதராக நிரூபித்துக் காட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கென தனித்த ரகசியங்கள் எதுவுமே இல்லை. அதனால்தான், 'நான் சுயசரிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை' என்று அவரால் துணிவுடன் சொல்ல முடிந்திருக்கிறது.     முதலாளித்துவ சிந்தனை மேலோங்கிக் கிடக்கும் பிரிட்டனில் ஒரு குக்கிராமத்தில் 1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்பா ஆசைப்பட்டதற்கிணங்க தான் ஒரு மருத்துவராகி விட வேண்டும் என்ற ஆசை, இளம் பிராயத்தில் அவ