Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வெண்ணந்தூர்

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (அக். 9) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆறாவது வார்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட திமுகவுக்கு அதிமுகவைக் காட்டிலும் 1700 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.   தே
ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,