Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வெடிகுண்டு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்போர் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க வந்த ஒரே கட்சி என்ற ஒரே நிலைப்பாட்டையே முன்வைப்பர். நாம் சொல்ல விழைவது, பாஜக ஒருபோதும் சாமான்ய மக்களுக்கான அரசு அல்ல; அது, 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதைத்தான். அதற்கு இன்னுமொரு உதாரணம்தான், 'நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா-2017' (Financial Resolution and Deposit Insurance Bill - 2017). ஆங்கிலத்தில் சுருக்கமாக, எப்ஆர்டிஐ (FRDI). அப்படி என்ன சொல்கிறது எப்ஆர்டிஐ மசோதா? சொல்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த மசோதா மக்களவையில் சமர்ப்பி க்கப்பட்டது. விரைவில் இந்த மசோதா சட்ட வடிவம் பெறக்கூடும். வாராக்கடன் காரணமாக வங்கிகள் திவால் ஆனால், நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புத்தொகையை கபளீகரம் ச