Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வீழ்ச்சி

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவ
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின. பகல் 1.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் அதிகபட்சமாக 1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து 49971 புள்ளிகளும், நிப்டி 251 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.   நிப்டி காலையில் 14999 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதிகபட்சமாக 15010 புள்ளிகளை தொட்டது. குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள் வரை சரிந்தது. காலையில் 50910 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 50986 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 49860 புள்ளிகள் வரையிலும் சென்றன. மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு