Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வீரபாண்டி ராஜா.

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

அரசியல், முக்கிய செய்திகள்
சேலம் அருகே நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த வீரபாண்டி ராஜாவால், அவருக்கு எதிர்தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது. விரைவில் வர உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக வகுத்துள்ள பரப்புரை வியூகங்கள் மக்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அக்கட்சியினர் நேரடியாக மக்களை சந்தித்து, இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளையும், ஆளுங்கட்சியின் அவலங்களையும் கேட்டு வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   கட்சி அளவில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களும் வெட்டவெளிச்சமாகத் தவறவில்லை. சேலம் கிழக்கு மாவட்ட திமுகவைப் பொருத்தவரை அயோத்தியாப்பட்டணம் மிக ம
சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன். தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள்,'' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். கலைஞர் பாணியிலான அரசியலில் இருந்து சற்றே விலகி, ஜெ., மாடல் அரசியலுக்கு தயாராகி விட்டார் என்பதை, அப்போதே உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழுவில் கர்ஜித்தது, இப்போது அடுத்தடுத்து நடந்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகள் கழக கண்மணிகளை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர்.   முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை கடந்த
”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

அரசியல், குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான நில அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது. 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அலைக்கழித்ததில் இறந்தே போனார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும் இப்போது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.   ''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்க
சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆளுங்கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், மாங்கனி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல்களையும் பட்டவர்த்தனமாக அம்பலமாக்கியுள்ளது.   ஆர்ப்பாட்டம்   அதிமுக அரசில் குட்கா ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், மணல் கொள்ளை ஊழல், சத்துணவு முட்டையில் ஊழல் என எல்லா துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் செப். 18ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது.   சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, அதிமுக அரசை வெளுத்து வாங்கினார்.   மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் என்றால் அது, செப். 18ம் தேதியன்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்தான்.