Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விலை உயர்வு

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.   அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட
‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது. படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட