Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விமான நிலைய விரிவாக்கம்

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.   கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் கட்டாயமாக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தன. இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பாக தண்டோரா போட்டு, மக்களுக்கு எந்த இடத்தில் கூட்டம் நடக்கிறது? எத்தனை மணிக்கு தொடங்குகிறது? விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்னென்ன என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.   ஆனால், ஜ
மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர். ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.     சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரு