Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வினாத்தாள் கசிவு

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வ
சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!;  மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!; மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
இன்று (மார்ச் 15, 2018) நடந்த சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு வினாத்தாள் நேற்று மாலையில் முன்கூட்டியே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதால் மாணவர்களும், பெற்றோர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று கணக்குப்பதிவியல் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாலையிலேயே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதாகக் கூறப்படுகிறது. வினாத்தாளின் சில பகுதிகள் மட்டும் வெளியாகி இருந்தன. பொருத்துக விடையளிக்கும் வினாவிற்கான விடைகள் தரப்பட்டிருந்தன. ஒருவேளை, விஷமிகள் யாராவது போலியாக அவ்வாறு பரப்பியிருக்கலாம் என மாணவர்கள் கருதினர். எனினும், தேர்வுக்காக தயாராகி வருவதால் வாட்ஸ் அப்-ல்