Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விசாரணை

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓசூரில் புதன்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.   கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. தனது பதவிக்காலத்தில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்துக் கொண்டு 3.10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.   இது தொடர்பான இரு வேறு புகார்களின் பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீதும் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து ராஜேந்திரபாலாஜி, முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவ
மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி,
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

குற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த
சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், விசாரணை என்ற பெயரில் வரவழைத்து 83 வயது முதியவர் என்றும் பாராமல் லட்டியால் மிருகத்தனமாக தாக்கியதில் முதியவருக்கு கை எலும்பு முறிந்தது. அவருடைய மகனுக்கு கண் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன.   சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக கந்தசாமி குடும்பத்தினரின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது. இவர்கள் இருவரின் நிலத்திற்கு இடையே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆத்துக்காடு பகுதி வரை நீண்டு செல்லும் ஓடை ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள், க
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில