Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வாக்கு எண்ணிக்கை.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப
உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, ஆட்சியில் இருக்கும் கட்சியினரின் அதிகார வரம்பு மீறல்களுக்கு பஞ்சமிருக்காது. அது, இப்போது நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் பட்டவர்த்தனமாக எதிரொலித்தன.   வாக்குச்சாவடிக்குள் பரப்புரை:   பொதுவாக, வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள் தங்கள் சின்னத்திற்கு பேச்சு, சைகைகள் உள்ளிட்ட எந்த விதத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், சொல்லி வைத்தாற்போல் எல்லா வாக்குச்சாவடிகளிலுமே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பு வேட்பாளர்கள், சுயேச்சைகள் என எல்லோருமே வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிமுக சார்பில் சந்தானராஜ் என்பவர் கட்சி கரை வேட்டியுடன் குண்டர்களுடன் நின்று கொண்டு, வாக்கு சேகரிப்பி
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதமே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பணப்பட்டுவாடா புக £ர் காரணமாக அப்போது திடீரென்று இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கு இன்று (டிசம்பர் 21, 2017) வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.