Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வருமானவரி விலக்கு

பட்ஜெட்:  நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

பட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரும், சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை 11 மணியளவில் வாசிக்கத் தொடங்கினார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், பாஜக அரசின் கடைசியாக வாசிக்கும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் 8.27 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். அவர்களில் 1.88 கோடி பேர் மாத சம்பளக்காரர்கள். மாத சம்பளம் பெறுவோருக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை. முந்தைய நிலவரம் அப்படியே தொடரும். நிரந்தர கழிவு முறை மீண்டும் தொடரும். அதன்படி, ரூ.40 ஆயிரம் நிர