Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ரெம்டெசிவர்

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த தகவல்களில் இருந்து... தொற்றின் வேகம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?   உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ், நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது.   முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறியிருக்கிறது. ஆகையால், குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.