Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மோடி

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலம் கடத்துவதன் பின்னணி என்ன என்பதை உலகறியும். ஒருபுறம் இரட்டை இலை சின்னம் முடக்கம்; மற்றொருபுறம், கட்சிக்குள் பிளவு என தடுமாறிக் கொண்டிருக்கும் அதிமுக, உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லைதான். அதிலும், இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்திப்பது என்பது ஜெயலலிதா அற்ற சூழ்நிலையில் உகந்தது அல்ல. அதனால்தான் பல்வேறு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல் ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து வருகிறது ஆளுங்கட்சி. இட ஒதுக்கீடு பிரச்னையில் முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர்கள் யாரோ அவர்களால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் உள்ளதாக அதிமுகவினர், திமுகவை பார்த்து சப்பைக்கட்டு வாதம் செய்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒரே அணியாக இணை
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்