Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மொபைல் போன்

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்க