Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: முற்றுகை

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை,  மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவராக சித்தரித்து, உளவுத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கும் மூன்றாம்தர வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க
எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது.   2343 ஹெக்டேர்   சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது.   ஒரே வாழ்வாதாரம்   இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்