Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மின்னாம்பள்ளி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.   மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்
தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.   இதற்காக தனியார் பட்டா நிலங்கள், விளை நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இரு போகம் விளையக்கூடிய நிலம், 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் வற்றாத கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா தோப்புகள் என மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களும் இந்த சாலைக்கு இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இதனால் சேலம் மாவட்டம் முழுவதும்
சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!;  ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சிறப்பு கட்டுரைகள், சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின சிறப்புக் கட்டுரை-   இன்று உலகெங்கும் முதலாளிய வண்ணங்களுடன் பொழுதுபோக்கு சடங்காக நடத்தப்பட்டும் வரும் மகளிர் தினம் என்பது, உண்மையில் குருதியில் மலர்ந்தது. உழைக்கும் பெண்களை சுரண்டிப் பிழைத்த கூட்டத்தினரிடம் இருந்து பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்த சர்வதேச பொதுவுடைமை இயக்கத் தலைவரான கிளாரா ஸெட்கின் போன்றவர்தான் சேலம் இந்திராணி (53). சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மின்னாம்பள்ளி கிராமம். பல்வேறு சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஊர்தான். எனினும், பட்டியல் இனத்தவர் இங்கு அதிகம். 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னாம்பள்ளி, கள்ளச்சாராய விற்பனை மையமாக இருந்தது. அந்த ஊரில் முக்கிய தலைகள் பத்து பேர். கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பதுதான் அவர்களின் முழுநேரத் தொழில். மின்னாம்பள்ளியில் கூலித்தொழிலாளர்களை போதையில் வைத்திருந்த 'பெருமை' அவர்களுக்கு