Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன.   சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.   இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   மாநகர
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள
சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

உணவு, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை- சட்டைப்பையில் வெறும் 20 ரூபாய் இருந்தால்போதும் வயிறார சாப்பிடலாம். முப்பது ரூபாயில் பொரியல், அப்பளம் சகிதமாக முழு சாப்பாடே சாப்பிட முடியும். இதெல்லாம் அனேகமாக சேலத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடும் என்பதே நிதர்சனம்.     சேலம் நகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், தனிநபர் வருவாய் அடிப்படையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆய்வில், சேலம் மக்களின் தனிநபர் வருவாய் 2004-05 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.29271 ஆக இருந்தது.     இந்த வருவாய் ஐந்து ஆண்டுகளில், 2010-11 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.48802 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது சேலம் மக்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.4067 பொருளீட்டுகின்றனர். இதை இப்படியும் சொல்லலாம்