Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மரணம்

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ
ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி
உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!

உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் அதிரடியான தீர்ப்பு அளித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருப்பூர் மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 25, 2018) மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கவுசல்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை பட்டப்பகலில் படுகொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் மாவட்ட சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த
உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!

உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!

தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் அதிரடியான தீர்ப்பு அளித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருப்பூர் மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 25, 2018) மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கவுசல்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை பட்டப்பகலில் படுகொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் மாவட்ட சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த
திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

அலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
இன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி
ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரத்து: அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நட