Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மனுத்தாக்கல்.

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர
தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்த சுவாதி, திடீரென்று பிறழ் சாட்சியமாக மாறியதால் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்டோபர் 1, 2018ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.   பொறியியல் பட்டதாரி   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில், கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை நிறைவு செய்திருந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர், கோகுல்ராஜுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்து வந்தார். அதனால் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. 23.6.2015ம்