Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மனித உரிமைகள்

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு போதிய கழிப்பறைகள், தண்ணீர், உணவு வசதிகள் செய்து தராமல் ஒவ்வொருமுறையும் தங்களை அரசும், தேர்தல் ஆணையமும் கிள்ளுக்கீரையாக நடத்துவதாக கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தல் பணிகளை முடித்துவிட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதோடு ஒரு வாக்காளனின் ஜனநாயக கடமை முடிந்து விடுகிறது. ஆனால், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி அளப்பரியது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள், அரசு, நி