Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பேரழிவு

5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
அதற்கு முன்பு இந்தியா கண்டிராத ஒரு மாபெரும் பேரிடரை நாடு அன்று இரவு சந்தித்தது. அந்த நாள், நவ. 8, 2016. திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சிகளில் தோன்றி, இரவு 8 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்று அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அதை டீமானிடைசேஷன் என்றார் பிரதமர். அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம். இப்படியொரு அஸ்திரத்தை ஏவிய பிறகு, தான் ஏன் அவ்வாறான முடிவுக்கு வந்தேன் என்பதற்கு மூன்று காரணங்களையும் சொன்னார். பணமதிப்பிழப்பின் மூலம் நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமன்ட் எனப்படும் பணமில்லா நடவடிக்கையை வளர்த்தெடுப்பது என காரணங்களை பட்டியலிட்டார், பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில், அதுவரை புழக்கத