Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அரசியல், முக்கிய செய்திகள்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர். பதவி ஏற்பு: அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அதிருப்தி: முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ