Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பிரபாகரன்

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ
சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!:  சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சினிமா, சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது. இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும். சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் 'அப்டேட்' செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி என்றால் அவருடைய உடலை ஏன் மரபணு சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், மரண சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கேட்டுள்ளதன் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். எம்.கே.சிவாஜிலிங்கம். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிப் போரின்போது, மே 17ம் தேதி, சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் வி டுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிங்கள பேரினவாத அரசு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் அவருடைய இறப்பு குறித்து இன்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்ல
விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் யார்? விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன். துவக்கத்தி
”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலைப் பார்த்து நானும், பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம் என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் குஜராத்தில் இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (9/10/17) அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வதோதராவில் தொழில் அதிபர்களைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் சகஜமாக அவற்றுக்கு பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பாஜக அரசு மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. நம் நாட்டில் தினமும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வெளிய