Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பியூஷ் மானுஷ்.

”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
'எடப்பாடி பழனிசாமி மீது சாபம்', 'விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்', 'உயிரோடு கொளுத்திவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...' என சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான நிலம் அளவீட்டுப் பணிகளின் கடைசி நாளான இன்று, பல்வேறு உணர்ச்சிகரமான போராட்டங்களுடன் முடிந்தது.   சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.   சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. 277.3 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை போடப்படுகிறது.   இதற்காக மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் 159 கிராமங்களில் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 85 சதவீத பரப்பளவு விளைச்சல் நிலங்கள். 100 ஹெக்
சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென்று இன்று (ஜூன் 23, 2018) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.   சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.   குறிப்பாக மன்சூர் அலிகான், 'எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவேன்,' என்று ஆவேசமாக பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கடந்த 17ம் தேதி காலை, சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக
எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.   சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.   தும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ''எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார். இந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர். சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு