Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பதிவாளர் தற்கொலை

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பணி நியமனங்களில் ஊழல், முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், தணிக்கையில் முறைகேடு என தொடர் சர்ச்சைகளின் வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கியதிலும் உள்நோக்கம் இருப்பதாக பல்கலை வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.   சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். அவருக்கு கடந்த 18ம் தேதி பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதிதாக பதிவாளர் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதுவரை முக்கிய பதவியான பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட
சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பணி நியமனத்தில் ஊழல், முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை என அடுத்தடுத்து திகில் கிளப்பும் சேலம் பெரியார் பல்கலை, விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமித்ததன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்க துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தன்னிச்சையாக யாதொரு நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அவரின் ஒவ்வொரு செயல்பாடும் பல்கலையில் உள்ள சிண்டிகேட் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அந்தளவுக்கு சிண்டிகேட் குழுவுதான், பல்கலைகளைப் பொருத்தவரை ஆகப்பெரிய அதிகார அமைப்பு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழு