Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பணப்பட்டுவாடா

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 27ம் தேதி நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்து வந்தது, வாக்குப்பதிவு அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிந்த நிலையிலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறு வரையறை உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஆனது. மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.   முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல்