Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பட்ஜெட்

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆனது.   நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாற்றினார்.   திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளில் ஆண்களை குடும்பத் தலைவராக பதிவு செய்திருந்த பலர், பெண்களை குடும்பத்தலைவராக குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யத் தொடங்கினர்.   இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பெண்கள் பெயரில் புதிய ரேஷன் கார்டுக்காக பதிவு செய்வோர் கூட்டம் அலைமோ
பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு
பட்ஜெட்:  நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

பட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரும், சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை 11 மணியளவில் வாசிக்கத் தொடங்கினார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், பாஜக அரசின் கடைசியாக வாசிக்கும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் 8.27 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். அவர்களில் 1.88 கோடி பேர் மாத சம்பளக்காரர்கள். மாத சம்பளம் பெறுவோருக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை. முந்தைய நிலவரம் அப்படியே தொடரும். நிரந்தர கழிவு முறை மீண்டும் தொடரும். அதன்படி, ரூ.40 ஆயிரம் நிர