Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப
இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டு நடுவண் பாஜக அரசு, நாட்டையே தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டங்களை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. இது, அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி பலமட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின் விநியோகம், அணுசக்தி தயாரித்தல், விமான போக்குவரத்து, கனிமச்சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய அதிரடியான முடிவுகள் எல்லாமே, தேசிய கட்டமைப்பு மேம்பாடு வரைவுத் திட்டத்திலேயே மறைமுகமாக கோடிட்டு காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipel
போர் விமானம் கொள்முதலில்  35 ஆயிரம் கோடி ஊழல்?;  மோடி மீது அடுத்த அட்டாக்!

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக. காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20